அரூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மொரப்பூரில் நடைபெற்றது, மாவட்ட செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் பங்கேற்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 19 செப்டம்பர், 2023

அரூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மொரப்பூரில் நடைபெற்றது, மாவட்ட செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் பங்கேற்பு.


தருமபுரி மாவட்டத்திற்கு  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் வருகை குறித்து அரூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மொரப்பூரில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு அவைதலைவர் கே.மனோகரன்  முன்னிலை வகித்தார்  மொரப்பூர் ஒன்றிய செயலாளர் இடிடி செங்கண்ணன் வரவேற்றார்  இந்நிகழ்ச்சியில் தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் அவர்கள் கலந்துக்கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.


எதிர் வரும்  26.09.2023 அன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்க வருகை தரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும்   இளைஞரணி செயலாளருமான உதயநிதிஸ்டாலின் அவர்கள் வருகை தர உள்ளதால் அவருக்கு  சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்,  அரூர்பகுதிகளில் இருந்து பெரும்திரளாக  இளைஞர்கள்  பங்கேற்க  வேண்டும். சட்டமன்ற தொகுதி வாரியாக கலைஞர் நூலகம் திறக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர் முனைவர் பி.பழனியப்பன்  ஆலோசனைகள்  வழங்கினார்.

 

நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் செ.கிருஷ்ணகுமார்  மாநில தீர்மான குழு செயலாளர் கீரைவிஸ்வநாதன் மாநில வர்த்தகரணி துணை செயலாளர் சத்தியமூர்த்தி இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் சிவகுரு  பொதுக்குழு உறுப்பினர்கள்  கலைவாணி வாசுதேவன்  தலைமை செயற்குழு உறுப்பினர் சென்னகிருஷ்ணன் ஒன்றிய செயலாளர்கள் அரூர் கிழக்கு கோ.சந்திரமோகன் மேற்கு வே.சௌந்தரராசு வடக்கு ஆர்.வேடம்மாள் மொரப்பூர் வடக்கு ரத்தினவேல், அரூர் நகர செயலாளர் முல்லைரவி  அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் இளைஞரணி கோட்டிஸ்வரன் தங்கசெழியன்  ஐடிவிங் கு.தமிழழகன் ஆதம் சண்முகம் சிறுபான்மை அணியின் மாவட்ட அமைப்பாளர் முகமதுஅலி அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் நா.முருகேசன் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை ரஜினிமாறன் திருமால்  சண்முகம்  அரூர் நகர நிர்வாகிகள் விண்ணரசன் செல்வதயாளன்    குமரன் மதியழகன் பூசைக்காரன் கணேசன்  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad