பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரைஆலை முன்பு நாளை நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு உழவர் பேரியக்க மாவட்ட தலைவர் அறிவிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 28 செப்டம்பர், 2023

பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரைஆலை முன்பு நாளை நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு உழவர் பேரியக்க மாவட்ட தலைவர் அறிவிப்பு.

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையின் முன்பு நாள காலை  11 மணிக்கு விவசாயிகள் சங்கங்கள் மற்றும் உழவர் பேரியக்கம் சார்பில் கரும்பு 1 டன்னுக்கு 4 ஆயிரம் ரூபாயவழங்க வேண்டும், கரும்பு வெட்டு கூலியை அரசாங்கமே ஏற்க வேண்டும், சர்க்கரை ஆலை பள்ளியில் நடைபெறும் நிதி முறைகேட்டை விசாரிக்க வேண்டும், மேலும் பல்வேறு முறைக்கேட்டில் ஈடுபடும் பள்ளி முதல்வரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.


20 வருடங்களாக தற்காலிக ஊழியராக பணிபுரியும் ஆலை தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.


இது குறித்து சர்க்கரை ஆலை நிர்வாகம் சார்பில் மேலாண்மை இயக்குநர் யோகவிஷ்னு விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு மாதம் காலம் அவகாசம் வழங்கும் படியும் அதற்குள் தங்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி தருவதாக கேட்டு கொண்டதன் பேரில் நாளை நடைபெற இருக்கும் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பதாகவும், ஒரு மாதம் காலம் வரை விவசாயிகள் பொறுமை காக்க வேண்டும் என  உழவர் பேரியக்க மாவட்ட தலைவர் முருகேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad