பென்னாகரம் வட்டம் ஏரியூர் அருகே உள்ள கெண்டையனஹள்ளி கிராமத்தில் விவசாயிகளுக்கு துவரை நாற்று நடவு தொழில் நுட்பங்கள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை மற்றும் அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் சார்பில் உள் மாவட்ட விவசாயிகள் பயிற்சி பென்னாகரம் வேளாண்மை உதவி இயக்குநர் சி. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
இதில் விவசாயிகளுக்கு துவரை நாற்று நடவு தொழில்நுட்பம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலர் தமிழ்செல்வி மற்றும் உதவி தோட்டக்கலை துறை அலுவலர் துர்கா மற்றும் வேளாண்மை வணிக துறை சார்பில் பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்டு துவரை நாற்று நடவு தொழில் நுட்பங்கள் பயிற்சி மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக விளக்கம் அளித்தனர்.
இந்த கூட்டத்தில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அட்மா திட்டம் சார்பாக செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் இர்பான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக