பள்ளியிலேயே சிலர் இந்த பழக்கத்தை கற்று வருகின்றனர், கல்லூரி காலங்களில் இது கூடுதலாகி மாணவர்களின் வாழ்க்கையே கேள்வி குறியாக மாற்றி விடுகிறது. இவற்றிலிருந்து விடபட முடியாமல் கடைசி நேரத்தில் தவறான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். விதவிதமான போதை பழக்கம் தருமபுரி மாவட்டதில் பல ஊர்களில் உள்ள மாணவர்கள் சிலர் வித விதமான போதை பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர்.
பெவிக்கால், தின்னர், நெயில் பாலீஸ். பெட்ரோல் உட்பட பொருட்களை வாங்கி அதை முகர்ந்து பார்க்கின்ற போது ஒருவித போதை கிடைக்கிறது. இது நாளடைவில் அதிக போதைக்காக வேறு வித போதை பொருட்களை வாங்க தள்ளப்படுதின்றனர். பெயிண்ட் கடைகளில் அளவிலான பெவிக்கால், தின்னர் பொருட்களை வாங்கி புத்தக பைக்குள் வைத்து கொள்கின்றனர். வகுப்பறையில் இதை எடுத்து அவ்வப்போது முகர்ந்து பார்க்கின்றனர்.
வீட்டில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நன்கு கவனித்து ஆராய வேண்டும். ஆசிரியர்களும் மாணவர்களை சோதனையிட வேண்டும். காவல்துறை பெயிண்ட் கடைகாரர்களிடம், மாணவர்கள் வந்து இதுபோன்ற பொருட்களை வாங்க வரும் போது, ஏன், எதற்கு வாங்குகிறாய் என்று விபரங்களை கேட்க அறிவுறுத்த வேண்டும். போதைக்கு அடிமையாக கிடக்கும் மாணவர்களை நாம் விழிப்புணர்வுடன் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம், சமீப காலமாக விடுமுறை தினங்களில் அரூர் மைதானத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் சிலர் மைக்கா ஒட்ட பயன்படும் fevicol heatxயை போதையாக பயன்படுத்தி வருகின்றனர்.
நேற்று விடுமுறை தினத்தில் 8 - 12 வகுப்பு படிக்கும் பெரிய மாணவர்கள் பாட்சாப்பேட்டை பள்ளி மீது ஏறி தண்ணீர் குழாயை உடைத்து அருகில் உட்கார்ந்து இதை பயன்படுத்தி உள்ளனர், இது மிக ஆபத்தான போதை பழக்கம். தற்போது அரூரிலும் மீண்டும் இது அதிகரிக்க தொடங்கி உள்ளது. பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகளை கண்காணியுங்கள், வணிகர்கள் தயவு செய்து அந்த heatx fevicol மாணவர்களுக்கு விற்க வேண்டாம், அடுத்த முறை அந்த மாணவர்கள் பிடிபட்டால் எந்த கடையில் வாங்குகிறீர்கள் என கேட்டு குழு மற்றும் முகநூலில் கடையின் பெயரை வெளியிட்டு விடுவோம்.
நம் எதிர்கால சந்ததிகள் சீரழிவதை தடுப்பது நமது கடமை, பணத்திற்காக யாரும் அவற்றை விற்க வேண்டாம், ஆரம்பத்தில் தடுக்காவிட்டால் நாளை உங்கள் பிள்ளைகளுக்கும் இந்த தவறான பழக்கம் வர வாய்ப்பு உள்ளது, தயவு செய்து ஒத்துழைப்பு தாருங்கள், சென்ற ஆண்டு நிறுத்தியிருந்தனர். தற்போது மீண்டும் அதிக அளவில் வாங்கி பயன்படுத்த தொடங்கி விட்டனர் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக