மாரண்டஅள்ளி அதிமுக பொதுக் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வந்தால் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராகி மக்கள் நல திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றுவார். முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு.
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி இந்தியன் வங்கி முன்பு அதிமுக சார்பில் அறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கில் செந்தில் தலைமையில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்திற்க்கு பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, மாவட்ட அவைத் தலைவர் நாகராசன், தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர் நெத்தியடி நாகையன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இதில் சிறப்பு விருந்தினராக பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பேசுகையில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு அதிமுக கொண்டு வந்த தாலிக்கு தங்கம், விலையில்லா இரு சக்கர வாகனம், மாணவர்களுக்கு மடிக்கணிணி, ஏழைகளுக்கு ஆடு,மாடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட ஏராளமான நல திட்டங்களையும் நிறுத்திவிட்டது,
குடும்ப தலைவி அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்குவதாக கூறி விட்டு தற்போது திமுகவினருக்கு மட்டுமே வழங்கி உள்ளதாகவும் வரும் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலில் வந்தால் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராகி மக்கள் நல திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றுவார் என பேசினார்.
இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர்கள் கோவிந்தன், ராஜா, மாவட்ட கவுன்சிலர் சரவணன், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் செந்தில், .கவுன்சிலர் விமலன், ஊராட்சி மன்ற தலைவர் கணபதி, கூட்டுறவு சங்க தலைவர்கள் புதுர்சுப்ரமணி, வீரமணி தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள், ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக