தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மேல்தெரு ராஜகணபதி விநாயகர் கோயில் முன்பு ஸ்ரீ சக்தி விநாயகர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
கடைசி நாளான நேற்று விநாயகர்சிலைக்கு பல வகையான பூக்களால் அலங்காரம் செய்யபட்டு அக்னி குண்டம் வளர்த்து சிறப்பு யாகங்களும் பூஜைகளும் செய்யப்பட்டு சாமிக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டது, இதையடுத்து சாமிக்கு கொழுக்கட்டை, சுண்டல், பொரி, பழங்கள் படைத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
அதனை தொடர்ந்து விநாயகர் சிலையை மேல் தெரு, கல்கூடஅள்ளி, மந்தைவெளி, பஸ்நிலையம், தக்காளிமண்டி உள்ளிட்ட முக்கிய வீதி வழியாக மேளதாளங்களுடன் ஊர்வலமாக சென்று ஒகேனக்கல் ஆற்றில் கரைத்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பாலக்கோடு மேல்தெரு மந்தைவெளி ஊர்பொதுமக்கள் மற்றும் சக்தி விநாயகர் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக