பாலக்கோடு அருகே கடமடை கிராமத்தில் தெருவில் தேங்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம்- மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 19 செப்டம்பர், 2023

பாலக்கோடு அருகே கடமடை கிராமத்தில் தெருவில் தேங்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம்- மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட கரகதஹள்ளி ஊராட்சி கடமடை கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன, இக்கிராமத்தில்  சாக்கடை கழிவு நீர் கால்வாய் முறையாக இல்லாததால் தெருவில் தேங்கும் மழைநீர் மற்றும் கழிவுநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் மழைநீர், கழிவுநீர் இரண்டும்  கலந்து சுகாதார சீர்கேடு ஏற்படுவது மட்டுமின்றி குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கு அடிக்கடி பல்வேறு உடல் நலகோளாறுகள் ஏற்பட்டு வருகிறது, தெருவில் தேங்கி நிற்கும் நீரிலேயே சிறுவர்கள் முதல் முதியோர் வரை நடந்து செல்ல வேண்யுள்ளது.


இதுகுறித்து பலமுறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவர்களிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை  எடுக்கப்படவில்லை, எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad