தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் மாண்புமிகு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் கலைஞர் மகளிர் உரிமை திட்டப்பயனாளிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை மாண்புமிகு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நாளை வழங்க உள்ளார்கள்.
இதனை தொடர்ந்து, சர்வதேச சிறுதானிய ஆண்டாக 2023-ஆம் ஆண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மாண்புமிகு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் சிறுதானிய திருவிழா நடைபெறவுள்ளது. இச்சிறுதானிய திருவிழாவில் சிறுதானிய உணவு பொருட்களின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்பொருட்டு மகளிர் சுய உதவிக்குழுக்களின் மூலம் சிறுதானியத்திலிருந்து உற்பத்தி செய்யும் பொருட்கள் மற்றும் KVK, வேளாண்மைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சுகாதாரத்துறை (உணவியல் நிபுணர்) ஆகிய துறைகளை கொண்டு 25 முதல் 30 அரங்குகள் அமைக்கப்படவுள்ளது.
இவ்விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி மற்றும் வங்கி கடன்கள் வழங்கப்படவுள்ளது. மேலும், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள ”மதி” சிறுதானிய சிற்றுண்டியகத்தினை திறந்து வைத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறைகளை சார்ந்த அலுவலர்களுடன் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மாண்புமிகு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சிகளில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை தலைமை அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக