இயற்கையைக் காப்போம் தலைமையகம் நிர்வாக குழு கூட்டம் ஏலகிரியில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் அல்லிமுத்து அவர்களால் குழுவின் தலையணி வெளியிடப்பட்டது .
மற்றும் கோபால் அவர்களால் வாகனங்களில் ஒட்டும் குழுவின் சின்னம், ஸ்டிக்கர் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் கிராம துணை தலைவர் திரு.நாகலிங்கம் அவர்கள் தலைமையில் ஏலகிரி கிராம சாலையோரத்தில் மற்றும் ஏலகிரி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது மரக்கன்றுகளை ஏலகிரி கொண்டு வந்து சேர்த்த நா.அருள் அவர்களுக்கும், ஏலகிரி மக்களுக்கும், இயற்கை காப்போம் நிர்வாகிகள் மற்றும் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக