மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டத்தின் செயலாக்க கூட்டம், மாவட்ட அளவிலான குழு கூட்டம் மற்றும் தேசிய அறக்கட்டளை உள்ளுர் குழு கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 22 செப்டம்பர், 2023

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டத்தின் செயலாக்க கூட்டம், மாவட்ட அளவிலான குழு கூட்டம் மற்றும் தேசிய அறக்கட்டளை உள்ளுர் குழு கூட்டம்.


தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டத்தின் செயலாக்க கூட்டம், மாவட்ட அளவிலான குழு கூட்டம் மற்றும் தேசிய அறக்கட்டளை உள்ளுர் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில் தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டத்தின் (RIGHTS) செயலாக்க கூட்டம் (District Implementation committee) மாவட்ட அளவிலான குழு கூட்டம் (District Level Committee) மற்றும் தேசிய அறக்கட்டளை உள்ளுர் குழு கூட்டம் (Local Level Committee) தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இன்று (22.09.2023) நடைபெற்றது.


உலக வங்கி நிதியுதவியுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைகள் புரிவதற்கு, தமிழ்நாடு அரசு மூலம் உரிமைகள் திட்டம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகள் முழுமையாக கிடைத்திடும் வகையில் ஒவ்வொரு உட்கோட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் (ழுளுஊ)  மற்றும் வட்டார அளவில்  துணை சேவை iமையங்கள் அமைத்து அனைத்து பணிகள் மேற்கொள்ளுதல், அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் கண்டறியும் வகையில் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொண்டு சமூக தரசுகளை உருவாக்குதல், தற்சார்பு மற்றும் ஆக்கதிறனை மேம்படுத்துவதற்கு திறன் Nம்பாட்டு பயிற்சி அளித்தல் மற்றும் முன் மாதரி திட்டங்கள் செயல்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.


இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கு தருமபுரி  முன்னோடி மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் வெளியிட்டு, கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி கையேடுகளை வழங்கினார்கள்.


இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது எனவும், இப்பணி  மகளிர் திட்ட களப்பணியாளர்கள் மூலம்  தருமபுரி மாவட்டம் முழுவதும் வருகின்ற 29.09.2023 முதல் 12.10.2023 வரை  கிராமப்புறங்களிலும், 29.09.2023 முதல் 22.010.2023 வரை நகர்புறத்தில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார்கள்.


மேலும், இக்கணக்கெடுப்பில் ஒரு மாற்றுத்திறனாளியும் விடுபடாமல் கணக்கெடுப்பு பட்டியலில் சேர்க்கும் பொருட்டு, அனைத்துறை அலுவலர்களின் கட்டுப்பாட்டில் உள்ள களப்பணியாளர்கள் மூலம் கணக்கெடுப்பு தொடர்பான தகவலை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும்,  அனைத்து வட்டாரங்களிலும் துணை சேவை மையங்கள் அமைப்பதற்கு ஏதுவாக துணை இயக்குநர் சுகாதார பணிகள் கட்டுபாட்டில் உள்ள  ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள கட்டடங்களில் காலியாக உள்ள கட்டடங்களை வழங்குமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.


இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் திருமதி.ம.யசோதா, இணை இயக்குநர் மருத்துவ பணிகள் மரு. சாந்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.ராமதாஸ், தணித்துணை ஆட்சியர் (சபாதி) திருமதி.நசீர் இக்பால், துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.விஜயா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.கு.குணசேகரன், முன்னோடி வங்கி மேலாளர் திரு.கண்ணன், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.பவித்ரா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திரு.கௌரிசங்கர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.செல்வம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவல்லி, மாநில திட்ட மேலாளர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்சி அலுவலர், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளிகள் நலசங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad