தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது, குறிப்பாக மாலை நேரங்களில் கூட்டம் கூட்டமாக வரும் தெரு நாய்கள் திடிர் திடிரென சாலையில் செல்வோரை துரத்தி சென்று கடிக்கின்றன.
இதனால் பொதுமக்கள் சாலையில் நடமாடவே பயப்படுகின்றனர். குறிப்பாக மாலையில் பள்ளி முடிந்து வரும் மாணவர்கள் மற்றும் பெண்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். கடந்த காலங்களில் தெருநாய்களை கட்டு படித்த அவற்றை பிடித்து குடும்ப கட்டுப்பாடு செய்து வந்தனர்.
தற்போதும் அதே போல் நடவடிக்கை மேற்கொன்டு தெருநாய்களை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக