தந்தை பெரியார் அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் 17ஆம் நாள் ஆண்டுதோறும் சமூக நீதி நாளாக அனுசரிக்கப்படுகிறது. அதன் பொருட்டு தருமபுரி மாவட்டம் நல்லானூர் மருதம் நெல்லி குழுமத்தின் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் மூலம் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டு அந்த தினத்தை அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்விற்கு கல்லூரி தாளாளர் முனைவர் கோவிந்த் ஐயா அவர்கள் தலைமை வகித்தார், கல்லூரி முதல்வர் முனைவர் பரஞ்சோதி கருத்துரை வழங்கினார், கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் சதீஸ் குமார் ராஜா, பெருமாள் பாலு ஆகியோர் சமூக நீதி நாள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக