அதன் தொடர்ச்சியாக தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள எம்.ஜி.ரோடு, தக்காளிமண்டி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அசைவ உணவகங்கள், துரித உணவகங்கள், தாபாக்கள் மற்றும் இறைச்சி கடைகளில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திடீர் ஆய்வு செய்தார்.
இதில் சுமார் 15க்கும் மேற்பட்ட உணவகங்களில் சமைத்த இறைச்சி, சமைக்காத இறைச்சி, கிரில்டு சிக்கன், தந்தூரி சிக்கன், சில்லிசிக்கன், சில்லிமீன் மற்றும் கிரேவி, பிரியாணி உள்ளிட்ட துரித உணவுகள் , மயோனைஸ், நாள்பட்ட இறைச்சியும், குளிர்பதன பெட்டியில் வைத்திருந்த சமைத்த இறைச்சி மற்றும் செயற்கை நிறம் அதிகம் ஏற்றப்பட்ட இறைச்சி என 20 கிலோ அளவிலான இறைச்சிகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆய்வுகள் நடைபெறும் என உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக