இந்த பள்ளியில் அமைந்துள்ள கழிவறையை மாணவிகள் பயன்படுத்த ஏதுவாக இல்லை, மிகவும் மோசமாக சுகதாரமற்று இருப்பதாக மாணவிகளும் பெற்றோர்களும் புகார் தெரிவித்தனர், அவர்களின் புகாரின் அடிப்படையில் சமூக ஆர்வலர்கள் ஆய்வை மேற்கொண்டனர், ஆய்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, சுகாதாரமற்ற கழிவறை, பழுதான 3 நாப்கின் எரிக்கும் எந்திரம், சுத்தம் செய்து பல மாதங்கள் ஆன கழிவறை, துர்நாற்றத்துடன் குளம் போல தேங்கி நிற்கும் கழிவு நீர், அதன் அருகில் 6ஆம் வகுப்பு வகுப்பறைகள் என பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
இதற்கு ஒரு படி மேலே தட்டு மற்றும் டிபன் பாக்ஸ் கழுவ கூடாது என எச்சரிக்கையுடன் நீர் தொட்டி, மேலும் பள்ளி தலைமை ஆசிரியை மாணவிகளை அருவருக்கத்தக்க வகையில் திட்டுவதாகவும், விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு போதிய அளவு உணவு கிடைப்பதில்லை எனவும் மாணவிகளும் பெற்றோர்களும் புகார் தெரிவித்தனர்.
மாவட்ட நிர்வாகமும், பள்ளி கல்வி துறையும் உரிய ஆய்வு நடத்தி மாணவிகளின் உடல் நலத்தையும் பள்ளியின் சுகாதாரத்தையும் காக்க வேண்டும் என பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக