கரகத அள்ளி ஊராட்சி மன்றத்தில் நிதி முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர் பணியிலிருந்து விடுவிப்பு . - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 26 செப்டம்பர், 2023

கரகத அள்ளி ஊராட்சி மன்றத்தில் நிதி முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர் பணியிலிருந்து விடுவிப்பு .


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் கரகத அள்ளி ஊராட்சி மன்ற செயலாளராக பணிபுரிந்து வந்தவர் கடமடையை சேர்ந்த வேலு (வயது.40). இவர் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக இவர் மீது மாவட்ட நிர்வாகத்திற்க்கு புகார்கள் சென்றன.

இது குறித்து விசாரிக்க மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டிருந்த நிலையில் விசாரனை அதிகாரிகள் இவர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டிருந்ததை உறுதி செய்து, மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அளித்தனர். மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் கரகத அள்ளி ஊராட்சி மன்ற செயலாளர் வேலுவை பணி நீக்கம் செய்து பணியிலிருந்து விடுவித்துள்ளார்.


நிதி முறைகேட்டால் ஊராட்சி செயலாளரின் பணி நீக்கம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad