தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் பாரதப் பிரதமர் பிறந்த தினத்தை முன்னிட்டு வளர்ச்சி தினமாக இன்று பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் கே. குள்ளாத்திரம்பட்டி கிராமத்தில் கூத்தப்பாடி ஊராட்சி துணைத் தலைவர் மணி தலைமையில் கொண்டாடப்பட்டது.
பாரதப் பிரதமரின் ஐந்து கொள்கைகள் குறித்த உறுதிமொழி அனைவரும் எடுத்துக் கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக சின்னபள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனி, பென்னாகரம் வட்ட நுகர்வோர் சுற்றுச்சூழல் சங்க தலைவர் சம்பத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மரக்கன்று நடும் நிகழ்வு இடம்பெற்றது. முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார். 50க்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் மகளிர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிறைவாக கே குள்ளாத்திரம்பட்டி உதிராத பூக்கள் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் பவுன்ராஜ் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக