தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கோட்டை தெருவில் மிகவும் பழமை வாய்ந்த வேணுகோபால சுவாமி கோயிலின் பிரதான நுழைவு வாயில் பழுதடைந்து இருந்த நிலையில் கோயில் அறங்காவல் குழுவினர் பழுதடைந்த நுழைவு வாயிலை இடித்து விட்டு புதிய நுழைவு வாயில் அமைக்க முற்பட்டனர். இதற்கு அப்பகுதியில் வசிக்கும் இசுலாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து கடந்த மாதம் 22ம் தேதி கோட்டாட்சியர் தலைமையில் இருதரப்பினருக்கும் நடைப்பெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்கனவே நுழைவு வாயில் எப்படி இருந்ததோ அதே போன்று கட்டி கொள்ள உடன்பாடு ஏற்பட்டது. அதனை தற்போது நுழைவு வாயில் கட்டுமான பணிகள் நடைப்பெற்று வருகிறது,
இந்த நிலையில் இன்று காலை நுழைவு வாயில் கட்டுமான பணியை செய்ய கூடாது என அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
தகவலறிந்த பாலக்கோடு டி.எஸ்.பி சிந்து சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து இரு தரப்பினரிடையும் பேச்சுவார்த்தை நடத்தி, மீண்டும் கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற ஏற்பாடு செய்வதாகவும் அதுவரை கட்டுமான பணியை நிறுத்தி வைப்பதாகவும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து கூட்டம் கலைந்து சென்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக