பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் உளவியல் தொடர்பான பயிற்சிப் பட்டறை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 25 செப்டம்பர், 2023

பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் உளவியல் தொடர்பான பயிற்சிப் பட்டறை.


தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில்  செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத்துறை சார்பாக உளவியல் தொடர்பான ஒரு நாள் பயிற்சிப்பட்டறை 'திசா: வாழ்க்கையை மேம்படுத்த ஒரு பார்வை' என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. 

இதில் கோயம்புத்தூரைச் சார்ந்த யோகா ஆசிரியரும் உளவியல் ஆலோசகருமான திருமிகு. சிவப்பிரியா மாதேஸ்வரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணாக்கர்களிடையே ஏற்படும் பல்வேறு உளவியல்  ரீதியான மாற்றங்களை பற்றி எடுத்துரைத்ததோடு,  உளவியல் ரீதியான மாணாக்கர்கள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கு விரிவாக விடை அளித்தார். தொடர்ந்து உளவியல் ரீதியான பிரச்சனை இருக்கக்கூடிய மாணாக்கர்களை தனித்தனியாக சந்தித்து அவர்களுக்கு தேவைப்படக்கூடிய ஆலோசனைகளையும் வழங்கினார். 


முன்னதாக நிகழ்வை ஆராய்ச்சி மைய இயக்குனர்(பொ) முனைவர் மோகனசுந்தரம் தலைமை உரையாற்றினார்.  தொடர்ந்து துறைத் தலைவர் முனைவர் சி. கோவிந்தராஜ்,  தனது துவக்க உரையில் மாணாக்கர்கள் மனநலம் பேணுவது பற்றின அவசியத்தை எடுத்துரைத்தார். ஆங்கிலத்துறை உதவி பேராசிரியரும் நிகழ்வு ஒருங்கிணைப்பாளருமான முனைவர் கிருத்திகா வாழ்த்துரை வழங்கினார்.‌ இரண்டாம் ஆண்டு மாணவன் தாமரைச்செல்வன் வரவேற்புரை வழங்க,  முதலாம் ஆண்டு மாணவி. செந்தாமரை நன்றியுரை வழங்கினார். 


முதலாம் ஆண்டு மாணவி செல்வி. விஜய் ஸ்ரீ நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.  நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஹரிகிருஷ்ணன்,  கோகுல் செல்வம் பூஜா ஸ்ரீ ஆகியோர் செய்து இருந்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad