தாட்கோ மூலமாக பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பெட்ரோல் நிலையம் அமைப்பதற்கு கடன் திட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 16 செப்டம்பர், 2023

தாட்கோ மூலமாக பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பெட்ரோல் நிலையம் அமைப்பதற்கு கடன் திட்டம்.


தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனைத்தைச் சார்ந்தவர்கள் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பெட்ரோல் நிலையம் அமைப்பதற்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது: தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனைத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்கள் பெட்ரோல் நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த நபர்களுக்கு தாட்கோ மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்.


இத்திட்டத்தில் பயன்பெற www.petrolpumpdealerchayan.in என்ற இணையதளத்தில் 18 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண்/பெண் அனைவரும் 27.09.2023-க்குள் விண்ணப்பிக்கலாம். பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் முதல் முறையாக கொள்முதல் செய்யும் பெட்ரோல் /டீசல் ஒரு டேங்கா) தொகையினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு குறைந்த வட்டியில் தாட்கோ மூலமாக கடனாக வழங்கப்படும். 


பாரத் பெட்ரோலியம் லிமிடெட் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தாட்கோ தலைமைய அலுவலக மாநில திட்ட மேலாளர் (திட்டங்கள்) கைபேசி எண்ணில் 7358489990 தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம், எண்-3, சாலை விநாயகர் கோவில் ரோடு, விருப்பாட்சிப்புரம், தருமபுரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad