இந்நிகழ்ச்சிக்கு தூய்மை இந்தியா திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கிராமப்புற வளர்ச்சி குழு உறுப்பினர் பிரேம்குமார் கிருஷ்ணா செவிலியர் கல்லூரியின் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி பசுமை அசோசியட் உறுப்பினர் திருமலை வாசன் திருவள்ளுவர் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் விக்ரம் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தூய்மை இந்தியா திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் தூய்மை இந்தியா திட்ட உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
அதன்பின்னர் வள்ளல் அதியமான் கோட்ட வளாகத்தூய்மையை 100க்கும் மேற்ப்பட்ட நாட்டு நலப்பணிதிட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேச்சு ஓவியப்போட்டி யில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ், பணிமுகாமில் கலந்து கொண்ட மாணவ மாணவியர் களுக்கு சான்றிதழ் ஆகியன தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் நிகழ்ச்சியில் நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை செந்தமிழ் செல்வி இலக்கியம் பட்டி அரசு விடுதிகள் இயக்குநர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார். நிறைவாக நல்லம்பள்ளி ஒன்றிய தேசிய இளைஞர் தொண்டர் அரிபிரசாந்த் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக