பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 20 செப்டம்பர், 2023

பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஒன்றிய தலைவர் பாண்டியம்மாள் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாலக்கோடு ஜக்க சமுத்திரம், பிக்கனஅள்ளி, ஜிட்டாண்டஅள்ளி. பஞ்சாயத்தில் உள்ள விவசாய தொழிலாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிகவேண்டும், வன நில சாகுபடி நிலங்களுக்கு பட்டா வழங்கவேண்டும்.


ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஏழை மக்களுக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழ் 100 நாள் வேலையை  ஆண்டுக்கு 200 நாளாக அதிகரித்திடவும், தினக்கூலி 600 ரூபாய் ஆக உயர்த்தி வழங்க வேண்டும் .


ஊரக வேலை திட்டத்தின் நிதியை பிற பணிகளுக்கு மடைமாற்றம் செய்வதை மாநில அரசு கைவிடவேண்டும். வீடு கட்டும் திட்டத்திற்கு  10லட்சம் ரூபாய்  நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும். கலைஞரின் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் ஏழை மக்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை  மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் முத்து, மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர் ராஜா உள்ளிட்ட விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad