பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு போதுமான கழிப்பிட வசதி இல்லை சி.இ.ஓ தகவலால் அதிர்ச்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 23 செப்டம்பர், 2023

பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு போதுமான கழிப்பிட வசதி இல்லை சி.இ.ஓ தகவலால் அதிர்ச்சி.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி கல்வியில்  ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 1358 மாணவர்கள் பயின்று வரும் நிலையில் பொது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர்களால் பள்ளியில் மாணவர்களுக்கு போதுமான கழிப்பிட வசதி உள்ளனவா என  கேள்வி கேட்கப்பட்டது, இதற்கு  பொது தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் நேர்முக உதவியாளர் மற்றும் தலைமை ஆசிரியர் கொடுத்த தகவலின் படி பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் போதுமான கழிப்பிட வசதி இல்லை எனவும் கழிப்பிடங்கள் கட்டி தர அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது என்றும்  சி இ.ஓ வால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. 

1 கருத்து:

S P.நாகராஜ் சொன்னது…

பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இது போன்ற அவல நிலைகள் உள்ளது அதுமட்டுமின்றி அங்குள்ள தென்னை மரத்தில் தேங்காய்கள் திருடி விற்பனை செய்யப்படுகிறது இதில் தலைமை ஆசிரியர் பங்கீடு உள்ளதா என்று தெரியவில்லை அதிகப்படியான தென்னங்கையில் விற்பனை செய்யப்படுகிறது

Post Top Ad