தற்போது உள்ள விடுதி வாடகை கட்டிடத்திற்கு அரசு வாடகை செலுத்தி வருகிறது. இக்கட்டிடத்தில் மாணவர்களுக்கு போதுமான கழிவறை வசதி, தூய்மையான குடிநீர் வசதி, மழைக்காலங்களில் விடுதியின் மேற்கூரை பழுதால் தங்கும் அறையில் நீர் வடிந்து ஒழுகுதல், மாணவர்களின் பாதுகாப்பு குறைவு, கல்லூரிக்கு செல்ல பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் நிலையை அறிந்த, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் விடுதியின் கழிவறை, தங்கும் அறை, உணவு, குடிநீர் போன்றவற்றை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
பின்னர், மாணவர்களிடையே அமர்ந்து இரவு உணவு சாப்பிட்ட அவர், வழங்கப்படும் உணவு குறித்தும் மாணவர்களிடையே கேட்டறிந்தார். மாணவர்கள், விடுதியில் போதுமான வசதியின்றி அவதியுறும் நிலையில் உள்ளனர். புதியதாக அமைக்கப்பட்டுள்ள விடுதி கட்டிடத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்வதாக மாணவர்களிடையே தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, தனி வட்டாட்சியர் ஆர்.சரவணன், விடுதியின் காப்பாளர் மூ.சாமிநாதன், கூடுதல் காப்பாளர் மா.மகாலிங்கம், அரசு கல்லூரி மகளிர் விடுதியின் தேர்வு குழு உறுப்பினர் ஒ.கே.கிருஷ்ணமூர்த்தி, விடுதி உதவியாளர், சமையலர், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக