Perfect Vision Chits PVT Ltd என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் கவனத்திற்கு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 21 செப்டம்பர், 2023

Perfect Vision Chits PVT Ltd என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் கவனத்திற்கு.


தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பூனையனூர் கிராமத்தில் குடியிருந்து வரும் ராஜா மகன் சு.அருண் (எ) சு.அருண்ராஜா மற்றும் ஜெகன் ஆகிய இருவரும் Perfect Vision Chits Pvt. Ltd என்ற நிதி நிறுவனத்தின் அலுவலகத்தை தருமபுரி டவுன், பென்னாகரம் மெயின் ரோடு, கோதுமை மில் எதிரில் உள்ள பண்ணாரி அம்மன் டிபார்ட்மெண்ட் மேல்மாடியில் நடத்தி 

  1. ரூ.1,00,000/-த்தை முதலீடு செய்தால் ஒரு நாளைக்கு ரூ. 1,800/- வீதம், 100 நாட்களுக்கு வழங்கப்படும். 
  2. ரூ.10,000/- த்தை முதலீடு செய்தால், ரூ180/-வீதம் 100 நாட்களுக்கு வழங்கப்படும் 
  3. ரூ.2,00,000/- த்தை முதலீடு செய்தால், ரூ.3600/-வீதம் 100 நாட்களுக்கு வழங்கப்படும் 
  4. ரூ.25,00,000/- த்தை முதலீடு செய்தால், ரூ.4,00,000/-வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும் என பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிமுகபடுத்தி பொதுமக்களிடம் முதலீடுகளை பெற்று கொண்டு திருப்பி தராமால் ஏமாற்றி மோசடி செய்துள்ளதாக தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு கு.எண். 1/2023 சட்டப்பிரிவு 420 இ.த.ச ரூ 5 Of TNPID Act 1997 படி வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு புலன் விசாரணையில் உள்ளது.

இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேற்படி சு.அருண் (எ) சு.அருண்ராஜா மற்றும் ஜெகன் ஆகிய இருவரும் நடந்தி வந்த Perfect Vision Chits PVT Ltd நிதி நிறுவனத்தில் சேர்ந்து பணத்தை முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருப்பின் உடனடியாக தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் தங்கள் வசம் உள்ள அசல் ஆவணங்களுடன் புகார் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அலுவலக முகவரி:- அலுவலக முகவரி:- காவல் ஆய்வாளர், பொருளாதார குற்றப்பிரிவு, க.எண்.2/127, வள்ளுவர் நகர், ஒட்டப்பட்டி, தருமபுரி - 636705.

கருத்துகள் இல்லை:

Post Top Ad