தருமபுரி மாவட்டத்தில் உலக இளைஞர் திருவிழா 2023-24 முன்னிட்டு, எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் நடத்தப்பெற்ற RED RUN மாரத்தான் போட்டியில் வெற்றிப்பெற்ற கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (20.09.2023) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்கள்.
தருமபுரி மாவட்டத்தில் உலக இளைஞர் திருவிழா 2023-24 கொண்டாடும் விதமாக எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பாக மாரத்தான் போட்டியானது கடந்த 09.09.2023 அன்று நடைபெற்றது. இப்போட்டியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி மாவட்ட விளையாட்டு அரங்கம் வரை 5கி.மீ தொலைவிற்கு நடத்தப்பட்டது. மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இம்மாரத்தான் போட்டியில் வெற்றிப்பெற்ற கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி, பாராட்டி, வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.
இந்த மாரத்தின் போட்டியில் செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி, தருமபுரி அரசு கலைக்கல்லூரி, பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இலக்கியம்பட்டி ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு தனித்தனியாக முதல் பரிசாக ரூ. 10000/-, இரண்டாம் பரிசாக ரூ. 7000/-, மூன்றாம் பரிசாக ரூ.5000/-, 7 நபர்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ. 1000/- பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு மாவட்ட திட்ட மேலாளர் திரு.சி.அருள், மாவட்ட மேற்பார்வையாளர் திரு.கா.உலகநாதன் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக