தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பூதனஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடம் ரூ.30.37 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது, விழாவில் சிறப்பு அழைப்பாளராக தருமபுரி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் கலந்துக் கொண்டு ரிப்பன் வெட்டி பள்ளி வகுப்பறைகளை திறந்துவைத்தார், பின்னர் பள்ளி குழந்தைகளுடன் கலந்துரையாடினார், பின்னர் அவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இந்த நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பாமக நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர், ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக