தருமபுரி மாவட்டத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 04.11.2023 அன்று அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல்.
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், தருமபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக (ம) நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், 04.11.2023 சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நடைபெறவுள்ளது. இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம், ஜவுளி, வங்கிசேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் 10,000-ற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்.
இம்முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசமானதாகும். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு, dpijobfair2023@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது 04342-296188 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. எனவே, இப்பணிக்காலியிடங்களுக்கு வேலைநாடுநர்களை தேர்வு செய்யவுள்ள தொழில் நிறுவனங்களும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் இம்முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக