மாரண்டஅள்ளியில் பேரூராட்சியில் உள்ள மயானத்தில் 1.கோடியே 55 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் எரிதகன மேடை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைப்பெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 19 அக்டோபர், 2023

மாரண்டஅள்ளியில் பேரூராட்சியில் உள்ள மயானத்தில் 1.கோடியே 55 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் எரிதகன மேடை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைப்பெற்றது.


தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியில் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் சுமார் 12 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

மாரண்டஅள்ளி - அமானிமல்லாபுரம் சாலை, டாஸ்மாக் அருகே உள்ள பொது மயானத்தில் இறந்தவர்களை தகனம் செய்ய பொது எரி தகனமேடை அமைக்க நீண்ட நாட்களாக பொதுமக்கள்  கோரிக்கை வைக்கப்பட்டு வந்த  நிலையில்  எரிதகன மேடை அமைக்க 1.கோடியே 55 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.


அதனை தொடர்ந்து எரிதகன மேடை அமைக்கும் பணியை மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் எம்.ஏ.வெங்கடேசன் அவர்கள் பூமி பூஜை செய்து துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு  பேரூராட்சி செயல் அலுவலர் ஆயிஷா முன்னிலை வகித்தார்.


இதில் துணைத் தலைவர் கார்த்திகா பன்னீர்செல்வம், கவுன்சிலர்கள் கார்த்திகேயன், வடிவேல், முனிராஜ், யதிந்தர், கீதாவடிவேல், ரீனா வேலு, சுகந்திரமேஷ், வெங்கடேஷ், புவனேஸ்வரி மணிகண்டன், பேரூராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad