பாலக்கோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளுடன் 10 அடி பள்ளத்தில் இறங்கிய அரசு பேருந்து - அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர் சுமார் 1-மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 22 அக்டோபர், 2023

பாலக்கோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளுடன் 10 அடி பள்ளத்தில் இறங்கிய அரசு பேருந்து - அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர் சுமார் 1-மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


தருமபுரி மாவட்டம் பொம்மிடி அரசு போக்குவரத்து பணிமணையில் இருந்து ஓட்டுநர் சக்திவேல் மற்றும் நடத்துனர் சுந்தரம் ஆகியோர் இன்று காலை தருமபுரி பேருந்து நிலையத்திலிருந்து 19 பயணிகளை ஏற்றி கொண்டு  அரசு பேருந்தில் தருமபுரி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஒசூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

காரிமங்கலம் அருகே மாட்லாம்பட்டி  தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது அணுகு சாலையில் இருந்து திடிரென குறுக்கே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் பேருந்தை இடது பக்கம் திருப்பி உள்ளார்,இதில் ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த 10 அடி ஆழமுள்ள பள்ளத்தில் பயணிகளுடன்  விபத்துக்குள்ளானது,இதில் பயணிகள் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


தகவலறிந்த காரிமங்கலம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து பயணிகளை மீட்டு வேறு பேருந்தில் அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.பயணிகளுடன் 10 அடி ஆழத்தில் அரசு பேருந்து தலைகுப்புற  கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கருத்துகள் இல்லை:

Post Top Ad