பிக்கனஅள்ளியில் 10 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்த எம்.பி.செந்தில்குமார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 31 அக்டோபர், 2023

பிக்கனஅள்ளியில் 10 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்த எம்.பி.செந்தில்குமார்.


பிக்கனஅள்ளியில் 10 இலட்சத்து 32 ஆயிரம்  ரூபாய் மதிப்பீட்டில் சாக்கடை கால்வாய்  அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்த எம்.பி.செந்தில்குமார்.


தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் பிக்கனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட வெலகலஅள்ளி கிராமத்தில்  முனிகிருஷ்ணன் வீடு முதல் சரவணன் வீடு வரையும்  மற்றும் பிக்கனஅள்ளி கிராமத்தில் முனிராஜ் வீடு முதல் சீனிவாசன் வீடு வரையும் புதிய கழிவு நீர் கால்வாய் அமைக்க 15வது நிதிக்குழு மானியத்தில் 10 இலட்சத்து  32 ஆயிரம்  ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது, அதனை தொடர்ந்து கட்டுமான பணிகள் தொடக்க விழா பிக்கனஅள்ளி ஊராட்சிமன்ற தலைவர் பத்மாவதி சுப்ரமணி அவர்களின் தலைமையில் இன்று  நடைபெற்றது.


இந்நிகழ்ச்சிக்கு மாநில விவசாயி அணி துணை செயலாளர் சூடப்பட்டி சுப்ரமணி, திமுக  ஒன்றிய செயலாளர்கள் வக்கில் கோபால், முனியப்பன், கிருஷ்ணன், அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக  தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அவர்கள் கலந்துக்கொண்டு திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வஜ்ரவேல், மாரண்ட பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பிணர் குட்டி, திமுக சார்பு அணி நிர்வாகிகள் ராஜபாட், மகேஷ்குமார், சந்துரு, ஹரிபிரசாத், ராமமூர்த்தி, கிருஷ்ணன், முனுசாமி, பெரியசாமி, ராஜா, கிளை செயலாளர் சூர்யா, தங்கராஜ், கிருஷ்ணன், கோவிந்தராஜ், வார்டு உறுப்பிணர்கள் தங்கவேல், சிக்கராஜ், தீபாசிவராஜ், முனிராஜ், முனுசாமி பாக முகவர் சின்ராஜ் மற்றும் கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad