பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தை 100க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையில் ஈடுபட்டதால் பரபரப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 4 அக்டோபர், 2023

பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தை 100க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையில் ஈடுபட்டதால் பரபரப்பு.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் 20 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலனவர்கள் கூலி தொழில் செய்து வருகின்றார். சொந்த வீடு இன்றி வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த அதிமுக ஆட்சியில் சுமார் 1500 ஏழைகளுக்கு பாலக்கோடு அருகே கூசுக்கல் கிராமத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆட்சி மாறியதால் வழங்கிய பட்டாக்களுக்கு இடத்தை ஒதுக்காமல் பொதுமக்களை அதிகாரிகள் அலைகழித்து வந்தனர்.


இந்நிலையில் பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் சென்ற பெண்கள் சிலர் குடி இருக்க இடமில்லை, வீட்டு வாடகை கட்ட முடியவில்லை, எனவே  பட்டா இடத்தை அளந்து வழங்குமாறு கேட்டனர். ஆனால் அதிகாரிகள் கடந்த ஆட்சியில் வழங்கிய பட்டா செல்லாது என தெரிவித்தனர். இத்தகவல் காட்டு தீயாக பரவியதால் பெண்கள் தாசில்தார் அலுவலகம் முன்பு கூட்டம் கூட்டமாக குவிய தொடங்கியதால் திடிர்  பரபரப்பு ஏற்பட்டது.


இந்நிலையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகளுடன்  தாசில்தார் அலுவலகத்தில் குவிந்து முற்றுகையில் ஈடுபட்டனர். இதையறிந்த பாலக்கோடு  தாசில்தார் ராஜா அடுத்த மாதம் பட்டா வழங்கிய இடத்தை அனைவருக்கும்  அளந்து தர ஏற்பாடு செய்வதாக உறுதி கூறினார், அதனை தொடர்ந்து பெண்கள் திரும்பி சென்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கிய இலவச வீட்டுமனை பட்டா செல்லாது என்ற சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad