வள்ளல் அதியமான் கோட்டம் ரூ. 1.00 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 20 அக்டோபர், 2023

வள்ளல் அதியமான் கோட்டம் ரூ. 1.00 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சியில் உள்ள வள்ளல் அதியமான் கோட்டம் ரூ. 1.00 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வள்ளல் அதியமான் கோட்டம் ரூ. 1.00 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (20.10.2023) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.


மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மானிய கோரிக்கையில் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வள்ளல் அதியமான் கோட்டம் ரூ. 1.00 கோடி (ரூபாய் ஒரு கோடி) மதிப்பீட்டில் புனரமைக்கப்படும் என்று கடந்த 27.04.2022 அன்று அறிவித்தார்கள்.


இதனை தொடர்ந்து, கடந்த 15.03.2023 முதல் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்புனரமைப்பு பணிகளை இன்றைய தினம் (20.10.2023) தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். வள்ளல் அதியமான் மற்றும் ஔவையார் அவர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மேற்கூரை அமைக்கும் பணி, வட்டமான அமைப்பில் ஆத்திச்சூடி அமைக்கும் பணி, வர்ணம் பூசும் பணி, புல்தரை அமைக்கும் பணி, சிறுவர் பூங்கா அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, எஞ்சியுள்ள பணிகளை விரைவில் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அவர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.


இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு.சிவக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.வெ.லோகநாதன் ஆகியோர் உடனிருந்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad