தர்மபுரி மாவட்டத்தில் 10 தாசில்தார்கள் அதிரடியாக இடமாற்றம் செய்து இன்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 27 அக்டோபர், 2023

தர்மபுரி மாவட்டத்தில் 10 தாசில்தார்கள் அதிரடியாக இடமாற்றம் செய்து இன்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு.


தருமபுரி மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, உள்ளிட்ட தாலுக்கா தாசில்தார்கள் மற்றும் தனி தாசில்தார்கள் என  மொத்தம் 10 தாசில்தார்கள் நிர்வாக காரணங்களுக்காக பணி இடமாறுதல் செய்து மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தவிட்டுள்ளார்.


அதன்படி தர்மபுரி தனி வட்டாட்சியர் பார்வதி நல்லம்பள்ளி தாசில்தாரகவும், நல்லம்பள்ளி தாசில்தார் ஆறுமுகம் பாலக்கோடு தாசில்தாகவும், பென்னாகரம் தாசில்தார் அன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளராகவும், பாலக்கோடு தாசில்தார் ராஜா நிலஎடுப்பு தாசில்தாரகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளரராக இருந்த சுகுமார் அரசு கேபிள் டி.வி. தனி வட்டாட்சியராகவும், கேபிள் டி.வி. தனி வட்டாட்சியராக இருந்த அருன் பிரசாத் சமூக பாதுகாப்பு தனி வட்டாட்சியர் என மொத்தம் 10 தாசில்தார்கள்  பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad