தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் - 2024 முன்னிட்டு, வரைவு வாக்காளர் பட்டியலினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இஆப., அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று வெளியிட்டார்கள்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் - 2024 தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக, வரைவு வாக்காளர் பட்டியலினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இஆப., அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (27.10.2023) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெளியிட்டார்கள்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் - 2024 தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக, வரைவு வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று வெளியிடப்பட்டது.
மாவட்ட ஆட்சியரகத்தில் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல்-2024 -ன்படி
57-பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் பாகங்கள் 272 எண்ணிக்கையிலும், வாக்குச்சாவடி மையங்கள் 182 எண்ணிக்கையிலும், வாக்காளர்களாக 1,19,277 ஆண்களும், 1,16,349 பெண்களும், 17 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,35,643 வாக்காளர்கள் உள்ளனர்.
58- பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் பாகங்கள் 294 எண்ணிக்கையிலும்,
வாக்குச்சாவடி மையங்கள் 180 எண்ணிக்கையிலும், வாக்காளர்களாக 1,25,361
ஆண்களும், 1,16,780 பெண்களும், 9 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,42,150 வாக்காளர்கள் உள்ளனர்.
59- தருமபுரி சட்டமன்ற தொகுதியில் பாகங்கள் 308 எண்ணிக்கையிலும், வாக்குச்சாவடி மையங்கள் 163 எண்ணிக்கையிலும், வாக்காளர்களாக 1,29,383 ஆண்களும், 1,26,566 பெண்களும், 98 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,56,047 வாக்காளர்கள் உள்ளனர்.
60- பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் பாகங்கள் 314 எண்ணிக்கையிலும், வாக்குச்சாவடி மையங்கள் 184 எண்ணிக்கையிலும், வாக்காளர்களாக 1,27,049 ஆண்களும், 1,25,908 பெண்களும், 15 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,52,972 வாக்காளர்கள் உள்ளனர்.
61- அரூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் பாகங்கள் 301 எண்ணிக்கையிலும், வாக்குச்சாவடி மையங்கள் 176 எண்ணிக்கையிலும், வாக்காளர்களாக 1,20,752 ஆண்களும், 1,19,716 பெண்களும், 22 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,40,490 வாக்காளர்கள் உள்ளனர்.
என மொத்தம் தருமபுரி மாவட்டத்தில் இவ்வரைவு வாக்காளர் பட்டியலில் 5 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து பாகங்கள் 1,489 எண்ணிக்கையிலும், வாக்குச்சாவடி மையங்கள் 885 எண்ணிக்கையிலும், வாக்காளர்களாக 6,21,822 ஆண்களும், 6,05,319 பெண்களும், 161 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 12,27,302 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 1489 வாக்குசாவடி நிலைய அலுவலர்கள் உள்ளனர்.
சிறப்பு சுருக்க திருத்தம் -2024-ல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் அல்லது முகவரி மாற்றம் தொடர்பாக 27.10.2023 முதல் 09.12.2023 வரை விண்ணப்பம் செய்யலாம். தருமபுரி மாவட்டத்திலுள்ள 885 வாக்குச்சாவடி மையங்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை படிவங்கள் பெறப்படும். 05.01.2023 முதல் 30.09.2023 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி 12,676 படிவங்கள் பெறப்பட்டு அதில் 11,704 படிவங்கள் ஏற்றுகொள்ளப்பட்டது.
05.01.2023 முதல் 30.09.2023 வரை 21,141 படிவம்-7 வரப்பெற்றது. அதில் 20,908 படிவங்கள் ஏற்கப்பட்டது. சிறப்பு சுருக்கத் திருத்தம்-2024ன்படி, சிறப்பு முகாம் ஆனது எதிர்வரும் 04.11.2023, 05.11.2023, 18.11.2023 மற்றும் 19.11.2023 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடைபெறுகிறது. 01.01.2024 என்ற தேதியை தகுதி நாளாக கொண்டு 18வயது நிரம்பிய நபர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க கோரி விண்ணப்பிக்கலாம். (31.12.2006 அன்று அல்லது அதற்கு முன்னர் பிறந்த நபர்கள்) 01.01.2007 முதல் 31.12.2007 வரை பிறந்த தேதியை கொண்ட 17 வயது நிரம்பிய நபர்களும் Advance Filing -ஆக விண்ணப்பிக்கலாம், ஆனால் 01.04.2024, 01.07.2024, 01.10.2024 ஆகிய தகுதி நாட்களில் எந்த தேதிகளில் தனியரின் வயது -18 பூர்த்தி அடையும் பொழுது தான் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி. கீதாராணி, தனி வட்டாட்சியர் (தேர்தல்கள்) திரு.அசோக்குமார், வருவாய் வட்டாட்சியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக