இக்கூட்டம் ஐங்கமையனூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இக்கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2022-2023 சென்ற ஆண்டிற்கான வரவு செலவு விவரங்களை ஊராட்சி மன்ற செயலாளர் ரங்கநாதன் வாசித்தார் .பின்னர் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் இந்த கூட்டத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கோரிக்கை மனுக்களை அளித்தனர் .வீடு இல்லாதவர்களுக்கு பிரதமர் முதலமைச்சர் வீடு வேண்டியும் தெரு விளக்கு புதியதாக சிமெண்ட் சாலை அமைத்தல் மற்றும் பலுதாகி உள்ள சாலைகளை சீரமைக்க கோரியும ஏராளமான கோரிக்கை மனுக்களை அந்த ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் அளித்தனர்.
இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணை தலைவர் அண்ணா நரசிம்மன், இளநிலை உதவியாளர் அசோக் குமார், கிராம நிர்வாக அலுவலர் பிரியா, வார்டு உறுப்பினர்கள், மக்கள் தேடி மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், கூட்டுறவு துறை சார்ந்தவர்கள், நியாய விலை கடை ஊழியர்கள் அங்கன்வாடி ஊழியர்கள் துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக