அரூர் பகுதியில் இரவு நேரத்தில் வீட்டின் முன் நிறுத்தி இருந்த கார் மற்றும் டூவீலர் கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்கள், அரூர் மேல் பாட்சாபேட்டை கீழ்பாட்சாபேட்டை அசோகாபட்டறை ஆகிய பகுதிகளில் தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
அதிகாலை எழுந்து பகுதி சேர்ந்த பொதுமக்கள் தங்களது வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார் கண்ணாடிகள் உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சடைந்தனர் இது குறித்து அக்கம் பக்கம் விசாரித்த போது தில்லைநகர் மேல்பாட்சாபேட்டை கீழ்பாட்சாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார் கண்ணாடிகள் உடைத்திருப்பதை கண்டு அதிர்ச்சடைந்தனர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரித்து பாதிக்கப்பட்டவர்கள் அரூர் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளிக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர் மர்ம நபர்கள் கார் கண்ணாடி உடைத்ததில் அப்பகுதியில் பெறும் பரப்பரப்பும் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த பகுதியில் தினந்தோறும் அங்காங்கே வாலிபர்கள் அமர்ந்து மது அருந்துவதும் இரவு நேரங்களில் பெண்கள் வெளியே நடமாடமுடியாமல் அச்சத்தில் உள்ளனர்.
இப்பகுதியில் சிசிடிவி கேமரா பொறுத்தவேண்டும் இரவு நேரங்களில் போலிசார் ரோந்து வருதில்லை இனிவரும் காலங்களில் தினமும் இரவு நேரத்தில் போலிசார் ரோந்து வரவேண்டும் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் வாலிபர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சிசிடிவி கேமரா பொருத்தவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக