File Image. |
அதில், ஏறத்தாழ 19500 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு, 5740 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக காலாண்டு வரி செலுத்தாமல் இயக்குதல், தகுதிச்சான்று, காப்புச்சான்று, புகைச்சான்று புதுப்பிக்காமல் இயக்குதல், அனுமதி சீட்டு இல்லாமல் இயக்குதல் போன்ற குற்றங்களுக்காக 513 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன.
மேலும், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றதாக 189 வாகனங்களுக்கும், அதிக பாரம் ஏற்றிச்சென்ற 60 வாகனங்களுக்கும், அனுமதீச்சீட்டு இல்லாமல் இயக்கிய 113 வாகனங்களுக்கும், அதிவேகமாக வாகனங்களை இயக்கிய 3510 வாகனங்களுக்கும், தகுதிச்சான்று பெறாமல் இயக்கிய 285 வாகனங்களுக்கும், காப்புச்சான்று/புகைச்சான்று இல்லாமல் இயக்கிய 740 வாகனங்களுக்கும், சிகப்பு நிற பிரதிபலிப்பான் இல்லாமல் இயக்கிய 432 வாகனங்களுக்கும் மற்றும் சிகப்பு எச்சரிக்கை விளக்கு இல்லாமல் இயக்கிய 222 வாகனங்களுக்கும் வாகன தணிக்கையின் பொழுது அபராதம் விதிக்கப்பட்டது.
மேற்கண்ட வாகன சோதனையின் மூலமாக அரசுக்கு சாலை வரியாக ரூ.87,72,240/- (எண்பத்தேழு லட்சத்து எழுபத்தி இரண்டாயிரத்து இருநூற்று நாற்பது மட்டும்) மற்றும் இணக்க கட்டணமாக ரூ.62,50,950/- (அறுபத்தி இரண்டு லட்சத்து ஐம்பதாயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது மட்டும்) ஆக மொத்தம் ரூ.1,50,23,190/- (ரூபாய் ஒரு கோடியே ஐம்பது லட்சத்து இருபத்து மூவாயிரத்து நூற்று தொண்ணூறு மட்டும்) உடனடியாக வசு+லிக்கப்பட்டது.
மேலும், இந்த வாகன சோதனை மூலம் பல்வேறு குற்றங்களுக்கு இணக்க கட்டணமாக ரூ.92,01,385/- (தொண்ணூற்று இரண்டு லட்சத்து ஆயிரத்து முந்நூற்று எண்பத்து ஐந்து மட்டும்) நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த ஒன்பது மாதங்களில் தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக அரசுக்கு வாகன சோதனை மூலம் மொத்தம் ரூ.2,42,24,575/- (ரூபாய் இரண்டு கோடியே நாற்பத்தி இரண்டு லட்சத்து இருபத்து நான்காயிரத்து ஐநூற்று எழுபத்தைந்து மட்டும்) வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
மேலும், தொப்பூர் மலைப்பாதையில் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பான 30 கி.மீ. மேல் இயக்கப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து துறை சார்பில் வேகம் கண்காணிக்கும் கருவி (Speed Radar Gun) உதவியுடன் கடந்த 2 ஆண்டுகளில் 11,231 வாகனங்களுக்கு e-Challan மூலம் ரூ.79,13,425/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, என தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு.த.தாமோதரன் அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக