பாலக்கோடு மைதீன் நகரில் தந்தை கண்டித்ததால் வீட்டை விட்டு மாயமான சிறுவனை 24 மணி நேரத்தில் மீட்ட போலீசார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மைதீன்நகரை சேர்ந்த வியபாரியின் 15 வயது மகன் பாலக்கோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார், நேற்று மாலை படிக்காமல் செல்போனில் கேம் விளையாடி கொண்டிருந்தார், இதனை கண்ட அவரது தந்தை செல்போன் எடுக்க கூடாது என மகனை கண்டித்துள்ளார்.
இதனால் விரக்தியடைந்த சிறுவன் நேற்று மாலை வீட்டிலிருந்து மாயமானார், மகன் மாயமானாது கண்டு அதிர்ச்சியடைந்த தந்தை, நண்பர்கள் மற்றும் உறவிணர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் மகன் கிடைக்காததால், மகனை கண்டுபிடித்து தர கோரி பாலக்கோடு போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார்.
பாலக்கோடு காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் உத்தரவின் பேரில் காவல் துணை ஆய்வாளர் எஸ்.ஐ.கோகுல் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் சேலம் பஸ் நிலையத்தில் சிறுவன் இருப்பதை கண்டறிந்து விரைந்து சென்று சிறுவனை மீட்டு தந்தையிடம் ஒப்படைத்தார்.
புகார் கொடுத்த 24 மணி நேரத்திற்க்குள் சிறுவனை கண்டுபிடித்து ஒப்படைத்த எல்.ஜ.கோகுல் மற்றும் போலீசாருக்கு சிறுவனின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக