பாலக்கோடு வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பஞ்சப்பள்ளி ஊராட்சி பட்டாபி நகர் கிராம பகுதியில் இருந்து சுமார் 30 க்கும் மேற்பட்டோர் மாற்று கட்சியில் இருந்து விலகி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் மாண்புமிகு முன்னாள் உயர்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் மற்றும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு கே பி.அன்பழகன் அவர்கள் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.எஸ். செந்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திரு.சரவணன் ஒன்றிய அவைத் தலைவர் திரு.P.T. சண்முகம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் எம்ஜிஆர் மன்ற செயலாளர் திரு. புதூர் சுப்பிரமணி ஒன்றிய துணை செயலாளர் திரு. அண்ணாமலை கொண்டசாமண அள்ளி மாதன் மற்றும் பஞ்சப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட முக்கிய கழக நிர்வாகிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக