இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி, சிறப்பு சுருக்கத் திருத்தம் - 2024 தொடர்பாக புதிய பாகங்கள் அமைத்தல், பகுதிகளை மறுசீரமைப்பு செய்தல், வாக்குச் சாவடியை இடமாற்றம் செய்தல், வாக்குச் சாவடியை வேறு கட்டடத்திற்கு மாறுதல் செய்தல் மற்றும் வாக்குச் சாவடி பெயர் திருத்தம் செய்தல் போன்ற மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் மேற்குறிப்பிடப்பட்ட பணிகளானது மேற்கொள்ளப்பட்டு, அம்முன்மொழிவானது இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது இந்திய தேர்தல் ஆணையமானது அனுப்பப்பட்ட முன்மொழிவுகளில் குறிப்பிடப்பட்டிருந்த மாற்றங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் மறுசீரமைப்புக்கு முன்பு 1485 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில், தற்பொழுது 4 புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டதால், மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையானது 1489-ஆக உயர்ந்துள்ளது.
மேலும், சட்டமன்றத் தொகுதி வாரியாக வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு பணிகள் குறித்த விவரங்களின் தொகுப்பு பின்வருமாறு:-
வாக்குச்சாவடி மறுசீரமைப்பு -2024 |
|||||
வ. எண் |
சட்டமன்ற தொகுதி |
புதிய பாகங்கள் உருவாக்குதல் (எண்ணிக்கை) |
பகுதிகளை மறு சீரமைப்பு செய்தல் (எண்ணிக்கை) |
கட்டடம் / இட மாற்றம் (எண்ணிக்கை) |
வாக்கு சாவடியின் பெயர் மாற்றம் (எண்ணிக்கை) |
1. |
பாலக்கோடு |
0 |
2 |
10 |
1 |
2. |
பென்னாகரம் |
0 |
2 |
57 |
0 |
3. |
தருமபுரி |
2 |
13 |
13 |
1 |
4. |
பாப்பிரெட்டிப்பட்டி |
0 |
2 |
9 |
0 |
5. |
அரூர் |
2 |
0 |
16 |
0 |
மொத்தம் |
4 |
19 |
105 |
2 |
இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக