தருமபுரி-மொரப்பூர் ரயில் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த ரூ.50 கோடி நிதி விடுவிப்பு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் DNV செந்தில்குமார் தகவல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 29 அக்டோபர், 2023

தருமபுரி-மொரப்பூர் ரயில் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த ரூ.50 கோடி நிதி விடுவிப்பு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் DNV செந்தில்குமார் தகவல்.


தருமபுரி மாவட்ட மக்களின் 80 ஆண்டு கால கனவு திட்டமான தர்மபுரி மொரப்பூர் இணைப்பு ரயில் திட்டத்திற்காக 2023 மத்திய பட்ஜெட்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தருமபுரி - மொரப்பூர் ரயில் திட்டத்திற்கு தேவையான நிலங்கள் அளவிடப்பட்டு நில உரிமையாளர்களுக்கு நிலத்திற்கான தொகை நிர்ணயம் பணிகள் முடிவடைந்தது, தருமபுரி எம்பி டாக்டர்.செந்தில்குமார் சென்னையில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்கை சந்தித்து ரயில் திட்டத்திற்கு நிலத்திற்கான தொகையை விடுவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து நில அளவைப் பணி மற்றும் நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகை 50 கோடி ரூபாயை முதல் கட்டமாக ரயில்வே துறை விடுவித்துள்ளது.


மேலும் தருமபுரி எம்பி செந்தில்குமார், சென்னையில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்கை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். தருமபுரி மாவட்டம் மொரப்பூர் மற்றும் பொம்மிடி ரயில் நிலையங்களில் பொதுமக்களின் கோரிக்கையான கோவை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி பெங்களூர் எக்ஸ்பிரஸ், பொம்மிடி ரயில் நிலையத்திலும், சென்னை திருவனந்தபுரம் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ். கோயமுத்தூர் திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மொரப்பூர் ரயில் நிலையத்திலும் நின்று செல்ல வேண்டுமென தெற்கு ரயில்வே மேலாளரிடம் கோரிக்கை வைத்தார். 


தற்போது கோயம்புத்துரில் இருந்து சென்னை வரை சென்று வரும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மொரப்பூர் ரயில் நிலையத்தில் குறைந்தபட்சம் 2 நிமிடங்கள் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad