தர்மபுரி மாவட்டம் குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசாருக்கு தர்மபுரி பகுதியில் ரேசன் அரிசி கடத்துவதாக கிடைத்த இரகசிய தகவலின் தர்மபுரி அருகே கே.என்.சவுளுர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாலக்கோட்டிலிருந்து தர்மபுரி நோக்கி சந்தேகப்படும்படி வந்த ஆம்னி கரை நிறுத்தி சோதனை செய்ததில் காரில் 11 மூட்டைகளில் 550 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரிய வந்தது, விசாரனையில் தர்மபுரியை சேர்ந்த சிங்காரவேலன் என்பதும் ரேசன் அரிசியை கடத்தி வந்ததும், தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர்.
கடத்தலில் கைப்பற்றப்பட்ட 550 கிலோ ரேசன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்படத்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்டு தப்பி ஓடி தலைமறைவான ராம்குமாரை தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக