தருமபுரி மாவட்டம் சேலம் மாவட்டத்தில் இருந்துபிரிந்து தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. அதன் காரணமாக இன்று தருமபுரி மாவட்டத்திற்கு 59-வது பிறந்தநாள் மாவட்டம் முழுவதும் அதனை கொண்டாடும் வகையில்அதியமான் கோட்டை பகுதியில் உள்ள வள்ளல் அதியமான் கோட்டத்தில் அதியமான் அவ்வை சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் பா.ம.க. கௌரவ தலைவர் ஜி.கே. மணி மற்றும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆகியோர் அதியமான் மற்றும் அவ்வையார் சிலை களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டத்திற்கான 59-வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி கொண்டாடினர். பின்னர் நிகழ்ச்சிக்காக வந்திருந்த கட்சித் தொண்டர்கள் மற்றும் இப்பகுதி வளாகத்தில் போட்டித் பயின்று மாணவர்கள் உள்ளிட்ட வருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன். இந்திகழ்ச்சியில் நல்லம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி , பா.ம.க மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், மாநிலத் துணைத் செயலாளர் சாந்தமூர்த்தி, பாகலஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முருகன், ஒன்றிய செயலாளர் ஓ.கே. எஸ்.கிருஷ்ணமூர்த்திஒன்றிய தலைவர்கள் வெங்கடேசன், சிவப்பிரகாசம், மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் முத்து வேல், குப்பன், சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக