தருமபுரி மாவட்டம் காரியமங்கலம் அருகே கடந்த மாதம் 28-ம் கர்நாடகாவில் இருந்து கோவைக்கு நகைகள் வாங்கிச் சென்ற பிரசன்னா என்பவரை பின்தொடர்ந்து வந்த கொள்ளை கும்பல், காரிமங்கலம் அடுத்த பூலாப்பட்டி அருகே, காரை வழிமறித்து கடுமையாக தாக்கி காருடன் 5.9 கிலோ தங்கம் மற்றும் பணம் 60 லட்சம் ரூபாய் கடத்தி சென்றனர்.
இதனை அடுத்து பிரசன்னா காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி மற்றும் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து இந்த வழக்கு சம்பந்தமாக கரூர் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் தலைமையில் 10 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடைபெற்று வந்தது சொகுசு காரை மட்டும் கொள்ளையர்கள் விட்டு விட்டு, தங்க நகை மற்றும் பணத்தை எடுத்துச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தீவிரமாக பல்வேறு மாநிலங்களில் செல்போன் தொடர்பு எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் இந்த கொள்ளை சம்பவத்தில் 15 பேர் ஈடுபட்டதும் அனைவரும் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்து வந்த குற்றவாளிகளை 10 தனிப்படை போலீசார் தொடர்ந்து பின் தொடர்ந்து வந்தனர், இந்நிலையயில் குற்றவாளிகள் சென்னையில் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கடத்தப்பட்ட தங்கம் 5. 9 கிலோ தங்கம் மற்றும் 19 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த முக்கிய குற்றவாளிகளான சுஜித், சரத், பிரவீன்தாஸ் ஆகிய மூன்று பேரை கோயம்புத்தூரில் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக சிகாபுதீன், சைனு, அகில், சதீஷ் ஆகியோரும் கைது செப்யப்பட்டனர்.
இந்நிலையில் இன்று இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான அந்தோணி மற்றும் ஸ்ரீல்மேத்யூ ஆகிய இருவரையும் காவல்துறையினர் சென்னையில் கைது செய்தனர் இதனைத் தொடர்ந்து ஒன்பது குற்றவாளிகளிடம் இருந்து நான்கு சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் 5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட பொழுது 60 லட்சம் பணத்தில் 13 லட்சம் ரூபாய் மதிப்பில் பிஎம்டபிள்யூ கார் வாங்கப்பட்டுள்ளது, அதேபோல் வேறு ஒரு இடத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட போது ஒரு கார் வாங்கியதும் தெரியவந்தது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு கார் என மொத்தம் நான்கு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் நிலையத்திற்கு கோவை மண்டல ஐஜி பவானிஸ்வதி சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி ஆகியோர் நேரில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை பார்வையிட்டு எஸ்பி. தலைமையில் திறம்பட செயல்பட்ட தனிப்படை காவல்துறையினருக்கு பாராட்டுகளை வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக