ஆதரவின்றி இறந்த 70 வயது முதி`யவரை மை தருமபுரி அமரர் சேவை மூலம் நல்லடக்கம் செய்தனர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 29 அக்டோபர், 2023

ஆதரவின்றி இறந்த 70 வயது முதி`யவரை மை தருமபுரி அமரர் சேவை மூலம் நல்லடக்கம் செய்தனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கேத்தாண்டப்பட்டி கிராமத்தில் 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் சாலை விபத்தில் அடிபட்டுள்ளார். இவரை மீட்ட காவல்துறையினர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர், மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரைப் பற்றி விசாரித்ததில் உறவினர்கள் யாரும் இல்லை எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

நேற்று நாட்றம்பள்ளி காவல் நிலைய காவலர் சிலம்பரசன், மை தருமபுரி சதீஸ் குமார் ராஜா, சமூக சேவகர் ஜாபர் ஆகியோர் உயிரிழந்த முதியவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். இதுவரை மை தருமபுரி அமரர் சேவை மூலம் 64 புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad