தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் ,பி.செட்டிஹள்ளி ஊராட்சியில் 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் உள்ளிட்ட பணிகளுக்கு பூமி பூஜை மற்றும் திறப்பு விழா ஊராட்சிமன்ற தலைவர் கணபதி அவர்கள் தலைமையில் இன்று நடைப்பெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் பாஞ்சாலை கோபால், கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் நாகராசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பி.செட்டிஹள்ளி ஊராட்சியில் உள்ள தீத்தாரஹள்ளியில் 18 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், ஜோதிஹள்ளியில் 14 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்ட பூமி பூஜை, 13 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் பி.செட்டி அள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா, பி.செட்டிஹள்ளி காலணியில் 6 இலட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கழிவு நீர் கால்வாய் அமைத்தல், 13 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கொம்மநாய்கனஹள்ளியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா அதே பகுதியில் 8 இலட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கழிவு நீர்கால்வாய் அமைக்க பூமி பூஜை என மொத்தம் 74 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளுக்கு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பி.செட்டி அள்ளி ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி, கவுன்சிலர் விமலன், கூட்டுறவு சங்க தலைவர்கள் வீரமணி, புதுர் சுப்ரமணி, அதிமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் திராளக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக