தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வாரச்சந்தையில் திங்கட்கிழமைதோறும் தேங்காய் சந்தை நடைபெறுவது வழக்கம். இன்று நடந்த தேங்காய் சந்தையில் காரிமங்கலம், காவேரிப்பட்டணம், பாரூர், அரசம்பட்டி, நாகரசம்பட்டி, பண்ணந்தூர், குடி மேன அள்ளி, செல்லம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்காக சந்தைக்காக கொண்டு வந்தனர்.
சந்தையில் சுமார் 60 ஆயிரம் தேங்காய் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் தேங்காய் அளவை பொறுத்து ரூ 8 முதல் 14 வரை தேங்காய் விற்பனை நடந்தது. இன்று நடந்த சந்தையில் சுமார் 7லட்சம் அளவிற்கு தேங்காய் விற்பனை நடந்தது, கடந்த வாரங்களை காட்டிலும் இன்று நடந்த சந்தையில் தேங்காய் வரத்து குறைவால் விலை உயர்ந்து காணப்பட்டது.
திருமண சுபமுகூர்த்த நாட்கள், கோயில்கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதை முன்னிட்டு தேங்காய் வாங்குவதற்கு அதிக அளவில் பொதுமக்கள் வந்த நிலையில் தேங்காய் வரத்து குறைவால், தேங்காய் விலை அதிகரித்து பலரும் தேங்காய் வாங்காமல் காணப்பட்டதாக தேங்காய் வியபாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக