17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு அரசு கலைக்கல்லூரியில் தொடங்கப்பட்டு, தேவரசம்பட்டி வரை சென்று மீண்டும் அரசு கலைக்கல்லூரிக்கு வந்தடையுமாறும், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு அரசு கலைக்கல்லூரியில் தொடங்கப்பட்டு, அதியமான் கோட்டம் வரை சென்று மீண்டும் அரசு கலைக்கல்லூரிக்கு வந்தடையுமாறும், 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட பெண்கள் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு அரசு கலைக்கல்லூரியில் தொடங்கப்பட்டு, ஒட்டப்பட்டி வரை சென்று மீண்டும் அரசு கலைக்கல்லூரிக்கு வந்தடையுமாறும் நெடுந்தூர ஒட்டப்போட்டி நடைபெறவுள்ளது.
போட்டியில் பங்கேற்பவர்கள் தங்களது வயது சான்றிதழ் வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் முகவரி (ஆதார்) சான்றிதழ்களை 06.10.2023 மாலை 5.00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு (ம) இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். நேரடியாக ஓட்டப்போட்டியில் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முதல் பரிசாக ரூ.5000/-, இரண்டாம் பரிசாக ரூ.3000/-, மூன்றாம் பரிசாக ரூ.2000/-, நான்கு முதல் 10 இடங்களைப் பெறுபவர்களுக்கு தலா ரூ.1000/-, மற்றும் தகுதிச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
போட்டியில் எதிர்பாராமல் நேரும் விபத்துகளுக்கும், தனிப்பட்ட இழப்புகளுக்கும் பங்குபெறும் பயனாளிகளே பொறுப்பு ஏற்க வேண்டும். எனவே தருமபுரி மாவட்டத்திலுள்ள 17 வயதிற்கு மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், விளையாட்டு வீரர்/வீராங்கனைகள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டியில் பங்கேற்று தங்கள் விளையாட்டுத்திறனை மேம்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக