தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் சுமார் 20 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஓகேனக்கல் கூட்டு குடிநீர் மற்றும் பஞ்சப்பள்ளி சின்னாறு அனையின் மூலம் பெறப்படும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
சின்னாறு அணையின் மூலம் பெறப்படும் தண்ணீர் சுத்திகரிப்பு செய்து பொது மக்களுக்கு வழங்க மாரண்டஅள்ளி பேரூராட்சி மூலம் 8 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா இன்று பேரூராட்சி தலைவர் எம்.ஏ.வெங்கடேசன் தலைமையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ஆயிஷா, துணைத் தலைவர் கார்த்திகா பன்னீர்செல்வம், கவுன்சிலர்கள் கார்த்திகேயன், வடிவேல், முனிராஜ், யதிந்தர், கீதாவடிவேல், ரீனா வேலு, சுகந்திரமேஷ், வெங்கடேஷ், புவனேஸ்வரி மணிகண்டன், பேரூராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக