தருமபுரி மாவட்டம் த . அம்மாபேட்டையில், பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தால் உயிரிழந்த எட்டு பேரின் குடும்பங்களுக்கு உதவி வழங்கபட்டது, மீளா துயரில் மூழ்கி கிடக்கிற எட்டு பேரின் குடும்பங்களை ஆற்றுப்படுத்துகிற வகையில், நம்மால் முடிந்த உதவியை உடனடியாக செய்வோம் என்கிற முடிவின் அடிப்படையில் இன்று அண்ணல் அம்பேத்கர் அறக்கட்டளை தருமபுரியின் சார்பாய் ரூ.40,000 (குடும்பத்திற்கு தலா ரூ 5000 வீதம்) அண்ணல் அம்பேத்கர் அறிவகம் அறக்கட்டளை - அரூரின் சார்பாய் எட்டு குடும்பத்திற்கும் அரிசி வழங்கப்பட்டது.
அறக்கட்டளைக்கு உற்ற துணையாக திருவள்ளுவர் நகரைச் சார்ந்த அரசு ஊழியர்கள் ரூ 3000 வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது, நிகழ்வில் இரண்டு அறக்கட்டளை சார்ந்த பொறுப்பாளர்கள், P.மாதையன் தலைவர் AAAT, மு.சிவராமன்பொருளர், C சேகர் து.தலைவர், தொழில் அதிபர் திரு.ராஜேந்திரன், திராவிடர் கழகம் ஊமை ஜெயராமன், சங்கர் ஆசிரியர், திரு. கிருஷ்ணன் BDO, பாளையம் ஆசிரியர் சிவராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக